Saturday, July 30, 2011

கருங்காலி

வணக்கம்,

       எல்லோருக்குமே ஒரு அறிமுகம் தேவைபடுகிறது இல்லையா...!
இந்த 'கருங்காலி'க்கான அறிமுகத்தையும் சொல்லி விடுகிறேன் ...
இந்த இயந்திர உலகத்தில் பிடித்தவர்களுடன் உரையாடுவது என்பதே
ஒரு அரிதான விசயமாகிவிட்டது எனக்கு ......
       
       கணினி திரைமுன்னே என் காலம் முடிந்துவிடும் என்பது
நான் அறிந்ததே.. நான் வலையிலும் செய்திதாள்களிலும் வரும் நகைசுவையை படித்தால்,அதை புன்னகையுடன் பகிர்ந்துகொள்ளவும், கண் கலங்கும் நிகழ்ச்சி நடந்தால் கதறி அழுவதற்கும், அக்கிரமம் ஏதும் கண்டால் அதை கண்டிக்கவும் எனக்கும் ஒருத்தன் தேவைப்பட்டான் ....

தேடி அலைந்தேன் .... அவனுக்கான பெயரை..

'கருங்காலி ' கிடைத்தான் எனக்கு ஒரு சினிமா பத்திரிக்கையில் ...

அதுவும் ஒரு விளக்கத்துடன் ...

"கருங்காலி
 நண்பனாய் இருப்பான்
 நட்பு இருக்காது ....
 எதிர்ப்பே இருக்காது
 ஆனால்
 எதிரியாய் இருப்பான் ..."


இந்த கருங்காலியும் அப்படித்தான்...

உங்களின் நண்பனை இருப்பான் .... நீங்கள் நல்லவர்களை இருக்கும் வரை..
ஒரு சிறு தவறு என்றாலும் நீங்கள் எதிர்க்க வில்லை என்றாலும் உங்களின்
எதிரியாய் இருப்பான்...
  நட்பு இருந்தால்...

எங்கோ படித்த ஞாபகம்...
" நமது எதிரி செய்யும்
         சின்ன விஷயங்கள் கூட
பெரிய தவறாக தெரியும் ....

நமது நண்பர்கள் செய்யும்
       பெரிய தவறுகள் கூட
சின்ன விசயங்களாக தோன்றும்.. "

இந்த கருங்காலி நண்பனுக்கும்... எதிரிக்கும் இடைப்பட்டவன் ....

ஒரு ரஜினி டயலாக் இருக்குமே..

"நல்லவனுக்கு நல்லவன்......   கெட்டவனுக்கு கெட்டவன் ....

கருங்காலியின் நோக்கம் தொடரும்..