Tuesday, September 6, 2011

பெண் சிசு கொலையை தடுப்போம் - பசங்களுக்காக !!!

அது என்ன... பசங்களுக்காக?? - நம்ம கண்ணெதிரே நடக்கும் சம்பவங்களும் ஆண்களை விட்டு போன சில உரிமைகளும் தான் இந்த பதிவு...

கிராமங்களில் உள்ள தாத்தாக்களை பற்றி கேட்டால் .. முதல் வார்த்தை அவருக்கு 5 பொண்டாட்டி, 12 பிள்ளைகள் என்று சொல்லி சிரிப்பார்கள் என் அப்பா வயதை ஒத்தவர்கள். ஆனால் இன்றோ ஒரு பொண்ண கட்டுறதுகுள்ள நம்ம பசங்க படுற பாடு சொல்லி மாளாது.



இதுக்கு காரணம், பொண்ணு வீட்ல அதிகம் எதிர் பாக்குராங்க, மாப்பிள்ளையோட அந்தஸ்து என பல்வேறு காரணங்கள்  இருந்தாலும் , முக்கியமான காரணம் இந்த பெண்சிசு கொலை தாங்க. ( அப்டின்னு யாரும் சொல்லல .. நானா உக்காந்து யோசிச்சது ) ஆமாம் மக்களே.. 1000  ஆண்களுக்கு என்று கணக்கு பார்த்தால் மிக குறைந்த பெண்களே இருப்பதாக ஆய்வு நம் தமிழ்நாட்டில்.

முன்னாடி எல்லாம் படத்துல கூட ரெண்டு பொண்ணுங்க ஹீரோவ காதலிப்பாங்க. ஆனா இப்போ ரெண்டு பசங்க அலையோ அலையின்னு அலையிறாங்க. படத்த விடுங்க, நாம ரோட்டல பாக்குற காட்சிகளை பார்த்தால், ஒட்டவே ஒட்டாத ஜோடிகளை பார்த்தால்( நம்ம பசங்க பைக் பின்னால இருக்குற பொண்ணுங்க முகத்தை தப்பித்தவறி பார்த்தால், காதல் எனக்கு புலப்படவில்லை.  பெண்களின் கணக்கு விகிதம் தான் தோனுகிறது எனக்கு), இணையத்தில் வரும் காதல் தோல்வி கவிதைகளை பார்த்தால் உங்களுக்கு என்ன தோணுகிறதோ இல்லியோ! என் கணக்கு எல்லாம் பெண்ணுக்கு பஞ்சம் வந்துவிட்டது. ( இப்பவே ஊர்வழக்குகளில் பேசி கொள்கிறார்கள் ' பொண்ணுக்கு நீங்க எதாவது போட்டுத்தான் கட்டிக்கிட்டு போகணும்).

இன்னும் கொடுமை என்னன்னா... ஒருத்தருக்கு ஒருத்தர் அறியாமல் ஒரே பொண்ண லவ் பண்ணி சண்டபோட்டுகிட்ட நண்பர்களும் இருக்காங்க.. ரெண்டு பையன்கிட்ட ஒரே மாதிரி பேசுற ஒரு பொண்ணும் இருக்குங்க... அப்புறம் இதோட விளைவுகளா-முறைகேட்ட உறவுகளை நம்ம சமுதாயம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. ( தினத்தந்தி படிச்சா தெரியும் ... பக்கத்துக்கு பக்கம்.. கள்ள உறவுகளின் ஓட்ட பந்தயம் .... பலி ... அப்பப்பா ... எவ்ளோ பக்கவா நியூஸ் புடிக்கிறாங்க)

இதிலிருந்து சங்கலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....
நம்ம பசங்களோட நலன் கருதியாச்சும்... பெண் சிசு கொலையை தடுப்போம் ....
              ஒரு நல்ல விசயத்தை எப்படியெல்லாம் சொல்ல வேண்டி இருக்கு ...

Friday, September 2, 2011

கச்சத்தீவும் போச்சு ... சென்னையும் போச்சா???


கச்சத்தீவு போன கதை தெரியும்... சென்னை எங்கே நம்மை விட்டு போச்சு?..  பாதி போயாச்சு .. போன வாரம் ஆனந்த விகடனில்  வந்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

நம் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வாழும் 70 சதவிகித
மக்கள் அண்டை மாநிலத்தவர்கலாம்! - உண்மையாய் கூட இருக்கலாம்.  காணும் இடமெல்லாம் தமிழனை ஒத்துபோகாத
புதிய புதிய முகங்கள்.
 நலாஸ் ஆப்ப கடையை பார்க்கும் போதும், சிட்டி  சென்டரில்  சுற்றும்  போதும், மெட்ரோ ரயில் மேம்பால வேலைகளின் போதும், சவுக்கார்  பேட்டையை கடக்கும்  போதும், ஐ.டி.  பார்க்குகளை கடக்கும் போதும்,
 ஏதேனும் ஒரு தெரு ஓரம் டீ கடையில் நிற்கும் போதும், தெருவுக்கு தெரு இருக்கும் ஆந்திர மெஸ்ஸில் புல் கட்டு கட்டும்போதும், வீடு வாடகைக்கு தேடி தெரு தெருவாய் அலையும் போதும், அம்பத்தூர் எஸ்டேட் சாலையை கடக்கும் போதும், ரயில்களில் பயணம் செய்யும் போதும் நம்மை ஒத்து போகாத முகங்களும் , புரியாத மொழியில் பேசி கொண்டே நம்மை கடந்து செல்லும் அண்டை மாநிலத்தவர்கள் எத்தனை எத்தனை பேரோ??


இப்படி நாம் நமக்கு அறியாத ஒவ்வொருவரையும் கடக்கும் நொடிகளில் நம்மை அறியாமல் சென்னையும் கடந்து   கொண்டு 
இருக்கிறது தமிழனை விட்டு என்பதே உண்மை.  அடித்தட்டு மக்களின் அன்றாட கூலி வேலை கூட தமிழனுக்கு இல்லை ( மேம்பால பணிகளில் இருக்கும் முகங்களை பாருங்கள்) .

 சரி ஒட்டுமொத்தமாய் தமிழனை ஒதுக்கிவிட என்னதான் காரணம் என்றால், குறைந்த கூலிக்கு தமிழன் ஒத்து கொள்வதில்லையாம்.  'அதிக நேரம் வேலை செய்வது இல்லையாம்'  என்கிறார்கள் முதலாளிகள்.


ஒரு தமிழனுக்கு கொடுக்கும் கூலி இரு வட மாநிலத்தவருக்கு போதுமாம்.

தமிழன் அண்டை நாட்டவருக்கு அடிமையாய் வெளிநாட்டில் பணிபுரிகிறான். அண்டை மாநிலதவர்களோ நாம் தமிழ்நாட்டில் சென்னையில் அடிமைகள்போல்.(தமிழன் பழிக்கு பலி வாங்குகிறானா? இல்லை தமிழனை பலி வாங்குகிறானா?)

இப்படி குறைந்த கூலி கொடுத்ததும் அவர்கள் இங்கு வர காரணம் என்னவென்று பார்த்தால்..

வடநாட்டில் இருப்பது போல் நக்சலைட், தீவிரவாத தொல்லை இல்லையாம்( அமைதி பூங்கவாம் சென்னை)

வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகள் அதிகமாம்( வந்தாரை
வாழ வைக்கும் .... இப்படி சொல்லி சொல்லி ... அட போங்கய்யா)

அதை விடுங்க... இதனால் என்ன விளைவுகள் தெரியுமா??

வட மாநிலத்திலிருந்து இங்கே வருபவர்கள் கணக்கு வழக்குகள்
அரசிடம் ஏதும் இல்லையாம். அவர்கள் இங்கு ஏதேனும் குற்றம்
புரிந்துவிட்டு தப்பித்தால் கூட நம்மால் ஒன்றும் செய்ய முடியாதாம்.

அப்புறம் ...அப்புறம் ... நம்ம சென்னை.. நம்ம சென்னையின்னு சொல்லறோமே .. அது நம்முடையதாய் இருக்காதாம்!!!

கவனம்.. சென்னை வாசிகளே..(மன்னிக்கவும்) .. தமிழர்களே...!

இல்லையென்றால் பின்னாளில் நமது சட்டசபையில் அடிக்கடி ஒலிக்கும் வாசகமாய் இது இருக்கும்.
                     " சென்னையை நாங்கள் மீட்டெடுப்போம்"
( அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு வாய்ப்பை அளித்து விடாதீர்கள்)