Monday, August 29, 2011

அட...நம்ம சென்னையா இது ?????

போன வார இறுதி நாட்கள் என்னை அட....போடா வைத்த வாரம்.
அப்படி என்ன சென்னையில் புது பொலிவு?- என்று ஆர்வ பாடுபவர்க்கு
இரண்டு செய்திகள்!

முதல் ஒன்று :

கடந்த வாரம் சனிகிழமை பெசென்ட் நகர் பீச்சில் நடைபெற்ற கிராமிய
கலை நிகழ்ச்சி. உண்மையில் கைதட்ட வைத்த ரகம்.  அத பார்க்க நம்ம காதலர்களுக்கு ஏது டைம்? - அவுங்க அவுக வேலைய பார்க்க கிரமிய நிகழ்ச்சி அது ஒரு பக்கம் கலைகட்டுது.  என்ன ஒரு கொடுமைன்ன?? - அவுங்க கஷ்டப்பட்டு மறைந்து போகிற கலையை மக்கள் முன் காட்டி நிலைக்க வைக்க -- அங்கே ரசித்த உள்ளங்கள் 15. ( என்ன கொடும சார் இது?)







இரண்டாவது:

நம்ம சைதாபேட்டையில் உள்ள கே.வி.எஸ் கார்டன் பக்கத்துல உள்ள
கருமாரியம்மன் கோவில்ல திருவிழா.( அதுதான் வருஷ வருஷம் நடக்குதே). அங்கே கண்ட காட்சிகள் அப்படியே நம்மை கிராமத்துக்கு அழைத்து செல்லும் என்பது உண்மை.  பால்குடம் தூக்கி, அலகு குத்தி, உடல் முழுவதும் வேல் குத்திக்கொண்டு ஊர்வலம் வந்தகாட்சி  கண்ணை வருத்த கூடிய நிகழ்ச்சி.( எப்டிதான் முடியுதோ???)







 இந்த தியாகராய நகர், அண்ணா நகர்,மெரினா பீச், அடையாறு
என சென்னையின்  வெளிதோற்றத்தை மட்டும் கண்டவர்கள்.
அந்த பக்கம் போய் பாருங்களேன்.

Thursday, August 18, 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

நாசாவுக்கும் திருநள்ளாறுக்கும் என்ன சம்பந்தம்????
இந்த செய்தி பற்றி அறியாதவர்கள் முனங்கும் கேள்வி...

"இது புதைந்த மக்கி போன செய்தி அல்லவே ??? " என்று
கேட்க தோன்றும் ஏற்கனவே படித்தவர்களுக்கு..

இது பழைய செய்திதான்!!! - பழமையை பற்றிய செய்தியும் கூட.

பல மாதங்களுக்கு முன்பு ஜூனியர் விகடனில் 2005-06 வாக்கில்
வந்ததாக எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.  படித்ததும் பிரமித்து
போனேன்...

இந்த செய்தியை படிக்காதவர்கள் படியுங்களேன் ...

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.


இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

Tuesday, August 9, 2011

செல்போன் என்னும் 'கன்னிவெடி​

செல்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்ட இந்த
உலகில், அதனை பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இல்லை என்பதுதான்
உண்மை... ஒரு காலத்தில் ஒரு ஆடம்பர பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட ஒரு பொருள் இப்படி ஒரு வளர்ச்சியை பெற்றிருகிறது என்றால் ...அதன் பயன்பாடு எண்ணிலடங்காதது .... உடலின் ஒரு பகுதி போல அனைவரின் கையிலும் இணைக்கப்பட்டுள்ளது இன்று ...

எவ்வளவு பயன்பாடு உள்ளதோ அதே அளவிற்கு கேடும்
விளைவிக்க கூடியது இந்த செல்போன்....

தினம் தினம் எத்தனை செய்திகள் ...

* பேசிகொண்டிருக்கும்போது செல்போன் வெடித்தது ..
* செல்போன் சார்ஜ் செய்யும் போது பேசி கொண்டிருந்ததால்
   மின்சாரம் தாக்கி ஒருவர் பலி...
*  இடது காதில் வைத்து பேசுவதால் மூளையை கதிர்வீச்சு
   தாக்கும் ஆபத்து...

இன்னும் இன்னும் எத்தனையோ....

இந்த செய்திகளை  எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ....
     
நேற்றைய சம்பவம் ......
புதுடெல்லியில் சார்ஜ் ஏறவில்லை என்பதால் பேட்டரியை எடுத்து
பார்க்கும் போது வெடிபொருள்போல் வெடித்ததால் வாலிபரின் கண்பார்வை
பறிபோனது ...  என்ன கொடுமை சார்????

செல்போனேவாசிகளே உஷார் ...!!!!
கடலை மன்னர்களே உஷார்.....!
கைகளிலே வைத்திருக்கிறோம் கன்னிவெடிகளை.... கவனம் தேவை!!!

Sunday, August 7, 2011

அண்ணா யுனிவர்சிட்டியா...? கார்ப்ரேசன் குப்பை தொட்டியா..?

அண்ணா யுனிவர்சிட்டியில் கலந்துரையாடல், அதாவது கவுன்சிலிங்
என்றால் மாணவர்களும் பெற்றோர்களும் வந்து குவிவார்கள்
என்றால், அனைத்து கல்லூரியின் விளம்பரசீட்டு அல்லவா?? வந்து
குவிந்து கிடக்கிறது....குப்பை மேடாக ...பல்கலைகழக வாயில் முழுவதும் ....

சுத்தம் சோறு போடும்.. சுற்றுசூழலை பாதுகாப்போம் .. என்று
பலகைகளில் மட்டும் எழுதி வைத்துவிட்டு.....இதை கண்டும்
காணாமல் விட்டு விட்டார்கள் ஏன்??

யுனிவர்சிட்டி எப்படி இருக்குமோ? கல்லூரி வாழ்க்கை எப்படி இருக்குமோ ?
என்று பல கனவுகளுடன் வரும் மாணவர்களுக்கும், பிள்ளைகளின் வாழ்க்கைக்கு அடித்தளத்தை அமைக்க வரும் பெற்றோர்களுக்கும், பலகலைகழக வாயிலில் காட்டும் முன்னோட்டம் எவ்வளவு அழகு??? 
கண்ட இடமெல்லாம் .... காகித அட்டைகள் .....

கல்வியானது வியாபர நோக்கத்துடன் பெருகி கொண்டிருக்கும் .. இந்த தருணத்தில்...விளம்பரத்திற்காக அவர்கள் செய்யும் வேலையை அவர்கள் நிறுத்தமாட்டார்கள்!.. கண்ட இடங்களில் குப்பைகளை போடும் பழக்கத்தை நம்மவர்களும் விடமாட்டார்கள்!! குறைந்தபட்ச தீர்வாக.... சில குப்பை தொட்டிகளையாவது நமது பல்கலைகழக நிர்வாகம் பஸ்ஸ்டாப் முதல் வாயில் வரை வைத்திருந்தால், கொஞ்சம் நன்றாய் இருந்திருக்கும.
கொஞ்ச குப்பைகளையாவது மற்றவர் பார்வையிலிருந்து
மறைத்திருக்கலாம் ....

பல கனவுடன் பல்கலைகழகத்தை காணவரும் மாணவர்களுக்கு,
ஒரு நல்ல அபிப்பிராயம் வரட்டுமே ...

ப்ளீஸ் ... எதாவது நடவடிக்கை எடுங்களேன்...

Tuesday, August 2, 2011

தமிழர்கள் - நாங்கள் - கிணற்றுத்தவளைகள்

உண்மைதான்..... நாங்கள் கிணற்றுதவளைகலாணோம்!
தற்போதைய சூழ்நிலையில்... தமிழனாய் நான் வெட்கப்படுகிறேன்.
மழை வரும்போதெல்லாம் கூச்சலிடும் தவளைகள்போல...
தமிழனுக்கு இடர் வரும்போதெல்லாம் ....
ஒன்று சேர்ந்து உருமுகிறோம் ..... கேட்பாரில்லை!
கத்தி கத்தி கண்டனம் தெரிவிக்கிறோம் ...  கேட்பாரில்லை!
உடலை கொளுத்தியும் கொண்டோம்...  கேட்பாரில்லை!

"செவிடன் காதில் ஊதிய சங்கை போல" - செவிடனாய்
இருந்தாலும் கூட நம்மை திரும்பி பார்த்திருப்பான்!
இவர்கள் செவிடர்கள் அல்ல..!  போல் நடிப்பவர்கள் !
நாம் ஊதினால் மட்டும் அல்ல. உலக்கையால் குத்தினால்
கூட கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஒரே ஒரு தாலிக்காக எத்தனை தாலிகளை இழந்துவிட்டோம்???
தாலியை மட்டுமா ? எங்களின் தாய்மார்களையும் சேர்த்தே
 அல்லவா... இழந்துவிட்டோம்.

எங்கள் பிஞ்சுகளின் முகத்தை பார்த்தும் இவர்கள் வருந்தவில்லை
என்றால்.. இவர்கள் இரும்பு இதயம் படைத்தவர்களா???
இல்லை ..இல்லை ... இதயமே அற்றவர்கள். இந்த இதயம்
அற்றவர்களிடம் இரக்கத்தை வேண்டி என்னும் எத்தனை முறை
பயணிக்க போகிறோம் என்று தெரியவில்லை.....
என்ன செய்வது ... நாங்கள்தான் கிணற்றுதவளைகளே உங்களுக்கு..

எங்களின் உயிர் - உங்களுக்கு அரசியல் வியாபாரம் ஆனது ..
எங்களின் இழப்புகள் - உங்களுக்கு போழுதுபோக்கனது.
எங்கள் தாய்மார்களின் கற்பு - உங்களுக்கு காட்சி பொருளானது.
உங்களை திட்டுவதருக்கு எம்மொழியில் இனி வார்த்தைகளும் இல்லை!
எங்களுக்கு யோகிதையும் இல்லை!

எங்களின் உயிரை நாங்கள் அல்லவா காப்பற்றி இருக்கவேண்டும்?
எங்களின் தாய்மார்களின் மானத்தை நாங்கள் அல்லவா காத்து நின்றிருக்கவேண்டும்? - நாங்கள் கையாலாகதவர்கள்!
பாதி இனம் அழிந்த பிறகும், இன்னும் கத்தி கொண்டே இருகிறோம்...
காயமடைந்தவர்கலயாவது காப்பாற்றுங்கள் என்று !

உடன்பிறப்புகளே..! கண்மணிகளே... ! என்று எவனாவது என் வீட்டின் முன்
ஓட்டுக்காக வந்து நின்றால் ... நிச்சயம் சாணியால்தான் அடிப்பேன்...
மானம் கெட்டவர்கள்!
பணம் என்பது வேறு ! எங்கள் பாமர மக்களின் உயிர் வேறு என்பது கூடவா
புரியவில்லை இங்கே பகுத்தறிவு பேசுபவர்களுக்கு.

எங்களுக்கு மானம் என்று ஒன்று இருந்திருந்தால் அன்றே
முதுக்குமாரர்களோடு சேர்ந்தே எரிந்திருக்க வேண்டும் !
உண்மையாய் நாங்கள் மானம் கெட்டவர்கள் !
மானம் இழந்தபின் பிணமாய் அலைந்துகொண்டிருக்கிறோம்!
எங்கள் உறவுகளுக்கு உயிர் கொடுங்கள் என்று!

நமக்கெல்லாம் அடுத்த வீட்டில் எரிந்தால் செய்தி!
நமது வீட்டில் எரிந்தால்தான் 'தீ' அல்லவா?
தமிழா சுற்றத்தாரோடு அழுது ஆறுதல் சொல்ல மட்டுமே
பழகிகொண்டுவிட்டோமே? -"நம்மால் வேறு என்னதான்
செய்ய முடியும்!"- இந்த பணம் தின்னும் பிணந்தின்னிகளின் மத்தியில்!

வெள்ளயர்கள்! மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டனர் !
நெஞ்சில் கொஞ்சம் ஈரம் இருக்கிறது என்று !
பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது இந்த பாதகத்தியை.
வரலாற்றை புரட்டும் போதெல்லாம் .. மவுனமாய் சிரிப்பேன்...
பெண்ணால் சாம்ராஜ்யமே சரிந்தது எனும் வாரத்தைகளை கடக்கும்போது!
இப்போது வலிகிறது ! கொலைகாரி சாய்த்துவிட்டாலே எங்கள் சத்திரியனை!

பெண்மை கொஞ்சம் இருந்திருந்தால், எங்கள் பெண்மணிகள் அழிந்திருக்கமாடர்கள்!.
இதயம் என்று இருந்திருந்தால், எங்கள் பிஞ்சுகளின் உதடுகளில்
புன்னகை மறைந்திருக்காது!
உன் ரத்த சொந்தகளுக்கு ஒன்று என்றால்தானே- உன் சதை கூட ஆடும்!
வெறும் கல்லை அல்லவா.. கரைக்க பார்க்கிறான் தமிழன்!
வேண்டாம் தமிழா ... இவர்களை நாடி அணிவகுப்பு!
இனியும் என்னிடத்தில் வலுயில்லை! இவர்கள் நடத்தும் நாடகத்தை பார்க்க!

பிஞ்சு குழந்தைகளே .... எங்களை மன்னித்துவிடுங்கள்....
தாய்மார்களே ... எங்களை மன்னித்துவிடுங்கள்......
வீரவித்துக்களே .... எங்களை மன்னித்துவிடுங்கள் ....
இந்த ஈன பிறவி எடுத்து ஏதும் பயனற்றதாய் போனதால் .....
அடுத்த முறையாவது .... நாங்கள் ஈழத்தில் பிறக்க ஆசைபடுகிறோம்....
ஈழ தமிழனாய் இருக்க ஆசைபடுகிறோம்......  அதுவரை உங்களுக்காக
குரல் கொடுத்தாவது துயரை ஆற்ற முயற்சிக்கிறோம்!