Friday, September 2, 2011

கச்சத்தீவும் போச்சு ... சென்னையும் போச்சா???


கச்சத்தீவு போன கதை தெரியும்... சென்னை எங்கே நம்மை விட்டு போச்சு?..  பாதி போயாச்சு .. போன வாரம் ஆனந்த விகடனில்  வந்த ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.

நம் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் வாழும் 70 சதவிகித
மக்கள் அண்டை மாநிலத்தவர்கலாம்! - உண்மையாய் கூட இருக்கலாம்.  காணும் இடமெல்லாம் தமிழனை ஒத்துபோகாத
புதிய புதிய முகங்கள்.
 நலாஸ் ஆப்ப கடையை பார்க்கும் போதும், சிட்டி  சென்டரில்  சுற்றும்  போதும், மெட்ரோ ரயில் மேம்பால வேலைகளின் போதும், சவுக்கார்  பேட்டையை கடக்கும்  போதும், ஐ.டி.  பார்க்குகளை கடக்கும் போதும்,
 ஏதேனும் ஒரு தெரு ஓரம் டீ கடையில் நிற்கும் போதும், தெருவுக்கு தெரு இருக்கும் ஆந்திர மெஸ்ஸில் புல் கட்டு கட்டும்போதும், வீடு வாடகைக்கு தேடி தெரு தெருவாய் அலையும் போதும், அம்பத்தூர் எஸ்டேட் சாலையை கடக்கும் போதும், ரயில்களில் பயணம் செய்யும் போதும் நம்மை ஒத்து போகாத முகங்களும் , புரியாத மொழியில் பேசி கொண்டே நம்மை கடந்து செல்லும் அண்டை மாநிலத்தவர்கள் எத்தனை எத்தனை பேரோ??


இப்படி நாம் நமக்கு அறியாத ஒவ்வொருவரையும் கடக்கும் நொடிகளில் நம்மை அறியாமல் சென்னையும் கடந்து   கொண்டு 
இருக்கிறது தமிழனை விட்டு என்பதே உண்மை.  அடித்தட்டு மக்களின் அன்றாட கூலி வேலை கூட தமிழனுக்கு இல்லை ( மேம்பால பணிகளில் இருக்கும் முகங்களை பாருங்கள்) .

 சரி ஒட்டுமொத்தமாய் தமிழனை ஒதுக்கிவிட என்னதான் காரணம் என்றால், குறைந்த கூலிக்கு தமிழன் ஒத்து கொள்வதில்லையாம்.  'அதிக நேரம் வேலை செய்வது இல்லையாம்'  என்கிறார்கள் முதலாளிகள்.


ஒரு தமிழனுக்கு கொடுக்கும் கூலி இரு வட மாநிலத்தவருக்கு போதுமாம்.

தமிழன் அண்டை நாட்டவருக்கு அடிமையாய் வெளிநாட்டில் பணிபுரிகிறான். அண்டை மாநிலதவர்களோ நாம் தமிழ்நாட்டில் சென்னையில் அடிமைகள்போல்.(தமிழன் பழிக்கு பலி வாங்குகிறானா? இல்லை தமிழனை பலி வாங்குகிறானா?)

இப்படி குறைந்த கூலி கொடுத்ததும் அவர்கள் இங்கு வர காரணம் என்னவென்று பார்த்தால்..

வடநாட்டில் இருப்பது போல் நக்சலைட், தீவிரவாத தொல்லை இல்லையாம்( அமைதி பூங்கவாம் சென்னை)

வெளி மாநிலத்தவர்க்கு வேலை வாய்ப்புகள் அதிகமாம்( வந்தாரை
வாழ வைக்கும் .... இப்படி சொல்லி சொல்லி ... அட போங்கய்யா)

அதை விடுங்க... இதனால் என்ன விளைவுகள் தெரியுமா??

வட மாநிலத்திலிருந்து இங்கே வருபவர்கள் கணக்கு வழக்குகள்
அரசிடம் ஏதும் இல்லையாம். அவர்கள் இங்கு ஏதேனும் குற்றம்
புரிந்துவிட்டு தப்பித்தால் கூட நம்மால் ஒன்றும் செய்ய முடியாதாம்.

அப்புறம் ...அப்புறம் ... நம்ம சென்னை.. நம்ம சென்னையின்னு சொல்லறோமே .. அது நம்முடையதாய் இருக்காதாம்!!!

கவனம்.. சென்னை வாசிகளே..(மன்னிக்கவும்) .. தமிழர்களே...!

இல்லையென்றால் பின்னாளில் நமது சட்டசபையில் அடிக்கடி ஒலிக்கும் வாசகமாய் இது இருக்கும்.
                     " சென்னையை நாங்கள் மீட்டெடுப்போம்"
( அரசியல்வாதிகளுக்கு இன்னும் ஒரு வாய்ப்பை அளித்து விடாதீர்கள்)

2 comments:

இறைகற்பனைஇலான் said...

ஆம் தோழா, மயிலாடுதுறையில் பெரிய ஓட்டலில் 5க்கு மேற்பட்ட அசாம்காரர்கள் பார்சல் மடிக்க வேலை பார்க்கிறார்கள். தமிழர்கள் மரியாதையான வேலை தனது ஊரில் பார்க்கவிரும்புகிறார்கள்.குறிப்பாக 10முதல்12வரை படித்தவர்கள் இப்படிப்பட்ட வேலைக்கும் போவதில்லை,நல்லவேலையும் கிடைக்கவில்லை.அரசியல் கட்சிக்களில் பிரியானியும்,சாராயமும் பணமும் ஓரிரு முறை கொடுத்துவிட்டு டிஜிட்டல் பேனர்களில் தலைகளை தொங்கவிட்டுவிட்டால் பெரியமனிதனாகிவிட்டதாக எண்ணி மடிகிறார்கள்.இதில் ஒடுக்கப்பட்டோரே அதிகம்.

Pebble said...

//தமிழன் ஒத்து கொள்வதில்லையாம்// This is some what true. When I visited India in my native some of the business people and farmers told this. No body wanna work, because of free benefits from state government(TN govt). Even if they come for work they dont work properly. This is the fact........

Post a Comment